Wednesday, March 16, 2016

பாடல் பெற்ற கோயில்களும், சைவ நாயன்மாரும் திருநீடூர்

திருநீடூர்

இறைவர் : அருட்சோமநாதர், செம்பொன்மேனியம்மான், கானநிருத்தசங்கரர்

இறைவி : வேயுறுதோளி, அதிகாந்தியம்மை

பதிகம் : சுந்தரர் 1

தலமரம் : மகிழ்

அளவான கோயில். உளழியிலும் அழியாது நீடித்திருக்கும் ஊர். ஆதலால் இப்பெயர் பெற்றது. இதற்கு வடுளாரணியம், மகிழாரணியம் முதலிய பெயர்களும் உண்டு. ஆவணித் திங்கள், ஞாயிற்றுக் கிழமைகளில் சூரிய பூசை சிறப்பு. சுந்தரர் இங்கு பணியாது செல்லும் பொழுது, திருவருளால் மீண்டும் வந்து, “நீடூர் பணியா விடலாமே” என்று திருப்பதிகம் பாடி வணங்கியது. சுவாமி மிகச்சிவந்த சோதிலிங்கத் திருமேனி. முனையாடுவார் நாயனார் அவதரித்த தலம். அவருக்கு தனிச் சந்நிதி உண்டு.

திருப்புன்கூரில் இருந்து குறுக்கு வழி 2 கி.மீ. நீடூர் இருப்புப்பாதை நிலையத்தில் இருந்து 1 கி.மீ. நடந்து செல்லலாம். பயண வசதிகள் பல உண்டு.

சோழநாடு, காவிரி வடகரை

No comments:

Post a Comment